
சென்னை தீவுத்திடலில் அரசு சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் மக்கள் பலர் குழந்தைகளுடன் அங்கே வந்துள்ளனர். அந்நேரத்தில் திடீரென ராட்சத ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. ராட்டினம் நின்று கொண்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.