
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கில் ஜூலை 6ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் அமைந்துள்ளது.