
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சண்டாளன் என்ற பெயரை சீமான் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்கு மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சென்னை பட்டாபிராம் காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.