வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70.50 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1840.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1911 ரூபாய்க்கு விற்பனையானது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகிறது.