ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஜம்மு அருகே சம்பாவில் பாகிஸ்தான் இரண்டாவது நாளாக அத்துமீறி உள்ளது. இன்றும் தாக்குதல் முயற்சியை தொடங்கியுள்ளதால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அந்த தாக்குதலை முறியடித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தானுக்கு கடன்கள் வழங்க எதிர்த்து வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புறக்கணிப்பு முடிவை இந்தியா எடுத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதி தவறாக பயன்படுத்தப்படலாம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.