
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி. இவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கே சி வீரமணி ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதோடு அவர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் கே சி வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.