
கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற ஏழு போலீசார் பேர் மாயமாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த 20 போலீசாரில் 13 பேர், சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறினார்கள்.
அதில் மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, 7 பேரும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.