பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பிலாவல் பூட்டோவின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான ‘X’  இல் “சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்தக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து சம்மந்தப்பட்டவர்களின்  பதிவுகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு விஷயங்களை மட்டுமின்றி, இந்தியாவின் உள்நாட்டுச் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களிலும் அடிக்கடி கருத்துகள் தெரிவிப்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக, சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்ந்து இந்திய சமூக ஊடகங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, ஏப்ரல் 24 ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டிருந்தது. தற்போது இம்ரான் கானும் பிலாவல் பூட்டோ ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டது.