
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு சட்டவிரோதம் எனக் கூறி முடிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். மேயர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது சட்டத்திற்கு விரோதமானது, குறிப்பிட்ட ஒரு கட்சியை சேர்ந்தவரை மேயராக தேர்வு செய்ய 8 வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை செல்லாததாக தேர்தல் அதிகாரி மாற்றி உள்ளார். தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலை ரத்து செய்ய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி குற்றவாளி என அறிவித்த உச்ச நீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தல் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்று மேயர் தேர்தலில் வென்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.