
நாமக்கல் மாவட்டத்தில் மகா மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை நடத்த அனுமதி கோரி பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில் திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை இருக்கிறது என்று கூறினார்.
தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று எந்த ஒரு ஜாதியினரும் உரிமை கோர முடியாது. திருவிழாக்களில் எந்த ஒரு பிரிவினருக்கும் முன்னுரிமை என்பது கொடுக்காமல் சமத்துவ முறைப்படி நடத்த வேண்டும். மேலும் கோவில் திருவிழாக்களில் அனைவருக்குமே கலந்து கொள்ள உரிமை என்பது இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.