பிரபல youtube பர் சவுக்கு சங்கர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதாவது பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட சில வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது. அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவானதால் சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை எதிர்த்து அவருடைய தாயார் ஆட்கொணர்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இதன் காரணமாக தற்போது சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலை ஆகியுள்ளார்.