சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9883 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.