
நாட்டில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தலைநகர் டெல்லியில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் அலங்கார ஊர்திகள் அனுப்பப்படும் நிலையில் மத்திய அரசு பார்த்து தேர்வு செய்யும் அலங்கார ஊர்தி களுக்கு மட்டுமே அனுமதி என்பது வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடம் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல் பரவியது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தின விழாவை முன்னிட்டு மொத்தம் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் தமிழ்நாடு பெயர் மற்றும் இடம்பெறவில்லை என்று சர்ச்சை எழுந்தது.
இதற்கு தற்போது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு கழகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு வருடமும் 15 மாநில அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேலும் இதன் காரணமாக இனி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில் தான் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியால் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.