
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு. இவர்கள் இருவர் மீதும் தற்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் இருவரும் திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜெகன் என்பவர் சென்று கொண்டிருந்தார்.
இவர் அமைச்சர்கள் சென்ற காருக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்தையாபுரம் உடைப்பாற்று ஓடை அருகே ஜெகனின் காரை மறைத்த முன்னாள் அமைச்சர்கள் இருவரும் அவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.