
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.
எல்லையில் போர் பதற்றம் நீடிப்பதால் ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. பஞ்சாபில் அடுத்து 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்: 75503 31902,
டோல்-ஃப்ரீ எண்: 80690 09901