
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை 1360 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 9916 ரூபாய்க்கும், 79328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் என்று கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 104000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.