
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.560 வரை குறைந்து ஒரு சவரன் 50,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6330-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 6855 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54,280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.