சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது.

இதனால் ஒரு கிலோ ரூ‌.80 முதல் ரூ.100 வரையில் விற்பனையானது. இந்நிலையில் இன்று தக்காளி வரத்து மீண்டும் அதிகமானதால் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ‌.60-க்கு விற்பனையாகிறது. மேலும் இதே போன்று பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.