திராவிடர் கழக தலைவர் கி வீரமணி. இவருக்கு 91 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செய்தி கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.