கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் வயநாட்டில் நேற்று நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அதாவது நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து மீட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பார்வையிடுவதற்காக இன்று சுகாதாரத்துறை அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மல்லபுரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருடைய கார் விபத்தில் சிக்கியது. மேலும் இந்த விபத்தில் அமைச்சருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.