
ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது கதவு பூட்டிக் கொண்டது.
நீண்ட நேரமாக குழந்தைகள் காருக்குள் சிக்கியதாக கூறப்படும் நிலையில் உறவினர்கள் கார் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே குழந்தைகள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.