கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எணணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களையும் காங்கிரஸ் கட்சி தாண்டி விட்டது.

இதை கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி 115 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கட்சி 79 இடங்களிலும், மத சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.