
தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதனைப் போலவே தமிழக எல்லையை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.