தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் பலரும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் விலகி சென்ற உறுப்பினர்களையும் மீண்டும் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

அதன்படி சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மீண்டும் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இணைந்துள்ளார். அதாவது சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சந்திரசேகர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவிலிருந்து விலகினார்.

அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் அணியில் இணைந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவருக்கு தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.