
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 71040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9687 ரூபாய்க்கும், ஒரு சவரன் 77496 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 109000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 2-வது முறையாக தங்கம் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.