
தமிழகத்தில் தர்மபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரா பகுதிகளில் வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை விட்டு நகர்ந்த பின் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் எனவும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.