பிரபல நகைச்சுவை நடிகரான குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் நடத்திய ஒரு நிகழ்ச்சியின் போது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று நகைச்சுவையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த சர்ச்சைக்கு பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார். அவர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று அஞ்சப்படுவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அவர் மும்பையில் இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டது ஏன் என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதன் காரணமாகத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.