
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலு
விழக்கம் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், நாளை மறுநாள் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அரசு தேர்வுகள் துறை கனமழை காரணமாக ஊரக திறனாய்வு தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. வருகிற 14-ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.