
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. . பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஜனவரி 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்குமா என்பது குறித்து 11ம் தேதி தெரிய வரும்.