
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய மற்றும் சிறப்பாக செயல்படும் வீரர்களை பார்த்து பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு வாங்குகிறார்கள்.
அந்த வகையில் இலங்கை வீரரான ஹசரங்காவை 5.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போன்ற மற்றொரு இலங்கை வீரர் மகிஷ தீட்சனாவை 4.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. மேலும் இதில் முன்னதாக தீக்ஷனா சென்னை அணிக்காக விளையாடிய நிலையில் அவரை ஏலத்தில் கேட்க அந்த அணி முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.