
இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் யோக்ஷித ராஜபக்சே 3 முறை நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இந்த நிலையில் தற்போது அவரை கைது செய்து இலங்கை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.