தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் இன்று புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக இன்று புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.