
சட்டபேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான்.
31.3.2025 வரை கண்ணாடி பாலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம். உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி இழைப்பாலம் திகழ்கிறது.