ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களும் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எந்த கருத்து கணிப்பும் வெளியிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து 1 மணி நேரத்துக்கு பின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.