
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டவுசா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் 35 அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறு தோண்டப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது சிறுமி நேற்று தவறி விழுந்துவிட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் மாநில மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அருகே உள்ள இடத்தில் ஜேசிபி மூலமாக பள்ளம் தோன்டினர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.