தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை கண்டித்து நாளை ஜனவரி 7ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.