
குடியரசு தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணித்திருந்தன.
இந்த நிலையில் அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.