ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.