வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டுவிரியன் பாம்பு கடித்து சங்கர் என்ற இளைஞர் உயிரிழந்தார். ஏற்கனவே சாலை வசதி இல்லாததால், பாம்பு கடித்து இறந்த குழந்தை தனுஷ்காவின் சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றது சர்ச்சையானது. அதேபகுதியில் மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.