
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது தற்போது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது சேலத்தைச் சேர்ந்த பால் வியாபாரியான முனுசாமியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுப்பதாக கூறி அவர் பண மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 65 லட்சம் வரை பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே சமீபத்தில் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மீது சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.