
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிமுக சார்பில் காவல்துறைக்கு பாதுகாப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30ஆம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து வேலுமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவருக்கு கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதோடு கருப்பு பணம் வைத்துள்ளதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மே 25ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
இது பற்றி போலீஸிடம் கூறினால் 3 மாதத்தில் உங்கள் குடும்பத்தில் 3 பேரை கொலை செய்து விடுவோம் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.