
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமாரும் அங்கு சென்றுள்ளார்.
இவருக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். கடந்த மாதம் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதற்காக எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த மாதம் அதிமுக மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் அரசு அதிகாரி அருண்ராஜ் ஆகியோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.