திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 367 மெட்ரிக் டன் குறைந்த கந்தக எரிபொருள் உள்ளதால் அவை கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அறிய சொல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.