
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது அவர்களின் ஆயுத கிடங்குகள், துறைமுகம், சியால்கோட் 6 உள்ளிட்ட முக்கிய பாகிஸ்தான் விமானத்தளங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்தியா தீவிரவாத முகாம்களை மட்டுமே தாக்கி அழித்த நிலையில் ஆணவம் பிடித்த பாகிஸ்தானோ தொடர்ந்து மூன்று நாட்களாக இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் அவ்வப்போது வெற்றிகரமாக முறியடித்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இனி இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றால் அது போராகவே கருதப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றால் கண்டிப்பாக அதற்கு பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.