
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி சேகர், நான் ஒரே ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தேன், மயிலாப்பூரில் 300 கோடி ரூபாய் வேலை நடந்தது. ஒரு பைசா கூட கமிஷன் வாங்காத ஒரு நேர்மையான எம்எல்ஏவாக இருந்தேன், அவ்வளவுதான்…. மறுபடியும் நானே MLA நிக்கணும் எதுக்கு அவசியமே இல்லை… நல்லவங்க வரட்டும், யார் நல்லவங்க இருந்தாலும், எனக்கு ஓகே தான்… அதுக்கு மேல ஒண்ணுமே கிடையாது.
தமிழ்நாட்டில் பிராமணர்கள் ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காங்க. நான் என்ன சொல்றேன்… தமிழ்நாட்டுல எத்தனை ஜாதிகள் இருக்கிறதோ, அத்தனை ஜாதிகளுக்கும் அசெம்பிளியில ரெப்ரசென்டேட்டிவ் இருக்கணும். ஆனால் இன்னைக்கு பிராமணர்கள் ரெப்ரசென்டேஷன் தமிழக அரசியலில் இல்லை. அப்படி இருக்கும்போது பிராமணர்கள் எல்லா தொகுதியிலும் நிற்க போறாங்க..
விருப்பப்பட்டவர்கள் பிராமணர்களுக்கு ஓட்டு போடப் போறாங்க… அதே சமயத்துல EWS அது யாருமே நிறைவேற்றுவதற்கு ஆதரவு கொடுக்கல… 10 சதவீதம் EWS அதுல 70 ஜாதிகள் இருக்கு. கிட்டத்தட்ட 70 லட்சம் ஓட்டு இருக்கிறது… அதை யாருமே பண்ணல… அதே சமயத்துல தினசரி வாழ்வாதாரத்துக்காக போராடுகின்ற பிணம் சுமக்குற பிராமணர்கள், டேபிள் துடைக்குறவுங்க, சமையல் வேலை செய்றவங்க, கூலி வேலை செய்றவங்க பிராமணர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் இருக்காங்க என தெரிவித்தார்.