
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி காணப்பட்ட காஜல் மீண்டும் எடையை குறைத்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தென்னிந்திய சினிமாவை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தென்னிந்திய சினிமாவில் சிறந்த டெக்னீசியன்கள் இருக்கிறார்கள். 4 மொழிகளில் சிறந்த கன்டென்ட் உருவாக்குகிறார்கள். ஹிந்தி தான் என்னுடைய தாய் மொழி. நான் பாலிவுட் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன்.
தென்னிந்திய சினிமா நல்ல நட்பு துறையில் இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சங்கள் இருக்கிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் எதுவும் ஹிந்தியில் கிடையாது. அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் போன்றவைகள் உள்ளது. இங்கு பணியாற்றுவதற்கான நல்ல சூழ்நிலையும் இருக்கிறது. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது எதுவுமே பாலிவுட்டில் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த கருத்துக்கு தென் இந்திய ரசிகர்கள் அவரை பாராட்டும் நிலையில் பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.