1990-களில் மம்தா குல்கர்னி பிரபல பாலிவுட் நடிகையாக திகழ்ந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தயாரிப்பில் வெளியான ‘நண்பர்கள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். இப்படத்தை நடிகர் விஜயின் தாயார் ஷோபனா இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இவர் கடைசியாக ‘முன்னா பாய்’ என்ற என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் 25 வருடங்களுக்கு இந்தியா வந்த மம்தா குல்கர்னி உத்திரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு சன்னியாசம் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான ஏற்பாடுகளும் முறையான சடங்குகளும் செய்துகொண்டு அவர் தன்னை சன்னியாசியாக மாற்றிக் கொண்டார். அதோடு அவர் தனது பெயரை ஷியாமாய் மம்தானந்த் கிரி எனவும் மாற்றிக்கொண்டார். அடுத்ததாக இவர் வாரணாசி மற்றும் அயோத்தி போன்ற புனித நகரங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் கூறிய போது, இவை அனைத்தும் கடவுளின் விருப்பம். அந்த விருப்பத்தை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன் என்றும் கூறினார்.