மகாராஷ்டிராவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள ரயில் நிலையத்தில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

பள்ளி படிப்பை முடித்த இவர் போட்டி தேர்வுக்கு தயாரானார். தற்போது 26 வயதான மாலா கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநிலம் பப்ளிக் சர்வீஸ் வைஸ்ன் கமிஷன் தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி அடைந்த மாலாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணி கிடைத்தது. அதில் அவர் விரைவில் சேர உள்ளார்.

இவர் இதற்கு முன்பு தாசில்தார் வேலைக்கான தேர்வில் 2 முறை தோல்வி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் போட்டி தேர்வில் வெற்றி பெற்று வருவாய் உதவியாளராக பணி அமர்த்தப்பட உள்ளார். இவருக்கு வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் இருந்து வருகிறார். இவர் தனது குடும்பப் பெயரை மாலாவுக்கு வைத்துள்ளார். இவர் மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார் என்று தெரிவித்தனர்.