
மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
72 வேட்பாளர்கள் கொண்ட மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே முதல் கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்நிலையில் 2வது கட்டமாக வெளியிட்டுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியலிலும் தமிழக வேட்பாளர்கள் பெயர் இல்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மனோகர் லால் கட்டார் ஹரியானாவின் கர்ணல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இமாச்சலில் உள்ள ஹமீர்புர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கிலும், நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
BJP released 2nd List of candidates for LokSabha Elections#LokSabhaElection2024 pic.twitter.com/k7zAkBmDyN
— Desh Ka Verdict (@DeshKaVerdict) March 13, 2024