பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலே யார் முதலமைச்சர் என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது ? மத்திய பிரதேசம் மாநிலத்திலேயே பாரதிய ஜனதா தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இந்த மாநிலத்திலேயே முதல்வராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக முதல்வராக இருக்கிறார்.  அவருடைய முகத்தை பார்த்து பார்த்து மத்திய பிரதேச மக்கள் சோர்ந்து விட்டார்கள், வேறு முதல்வர்களையே அவர்கள் பார்க்கவில்லை, என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பாக பேசப்பட்டது,

பிரச்சாரம் சமயத்தில் பேசப்பட்டது. இதனால் தான் பாரதி ஜனதா கட்சி அந்த மாநிலத்திலே பல மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைலாஷ் விஜய் வர்கியா போன்ற மூத்த தலைவர்கள் ஆகியோரை களம் இறக்கியது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே பெண்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து மாமாஜீ என்ற செல்ல பெயர் பெற்றிருக்கும் சிவராஜ் சிங் சவுகானின் நலத்திட்டங்கள் காரணமாக பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்று  இருக்கின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரையே மீண்டும் முதல்வராக கொண்டு வருவதா ? அல்லது ஜோதிராதித்ய சிந்தியா  போன்ற இளைய தலைவரை அந்த பதவிக்கு கொண்டு வருவதா ? என்று பாரதிய ஜனதா கட்சி தலைமை ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.  அதேபோலவே ராஜஸ்தான் மாநிலத்தில் முன்பு முதல்வராக இருந்தவர் வசுந்தரா ராஜு. அவர்களுக்கு பதிலாக இளைய தலைவர்களை கொண்டு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியது.

அந்த சமயத்திலேயே கஜேந்திர சிங் செகாவத் மற்றும் தியா குமாரி உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் களமிறக்கப்பட்டு,  அவர்கள் முதல்வர் வேட்பாளராக இருப்பார்களோ எனவே பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு  வந்தது. ஆனால் அசோக் கெலாட் வலுவாக பிரச்சாரம் செய்து,  காங்கிரசுக்கு வெற்றி கொடுத்து விடுவார். அதை தடுக்க வசுந்தரா ராஜுவால் தான் முடியும் என வசுந்தரா ராஜுயை மீண்டும் பாரதிய ஜனதா களம் இறக்கியது.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றி கிடைத்திருக்கும் நிலையில்,  அவரே முதல்வராக நியமிக்கப்படுவாரா ?  அல்லது இளைய தலைவர்கள் யாரேனும் அந்த பதவிக்கு வருவார்களா ?  என சந்தேகமாக பாரதிய ஜனதா கட்சி  வட்டாரங்களிலே பேசப்படுகிறது. இதைத் தவிர சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தான் வெற்றிபெறும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலே,  நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என விடா முயற்சியுடன் போராடி வந்தவர் ரமன் சிங். முன்பே முதல்வராக இருந்தார். அவரை மீண்டும் கொண்டு வரப்படுவாரா? அல்லது வேறு புதுமுக வேட்பாளர் யாரேனும் கொண்டு வர படுவார்களா ? என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலே வாக்குகள் சேகரிக்கப்பட்டன. ஆகவே புதிய தலைவர்களை கொண்டு வருவதில் எந்த தயக்கமும் இல்லை என பாரதி ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி,  மூன்று மாநிலங்களில் முதல்வர்களை தேர்ந்தெடுப்பார்கள் என பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள்.

இன்று மாலையிலே முதலில் கொண்டாட்டம். அதன் பிறகு முதல்வர்கள் தேர்வு தொடர்பான ஆலோசனை தொடக்கம் என்று சூழ்நிலையில் தான் தற்போது பாஜக இருக்கிறது. கொண்டாட்டத்துக்கு பாஜக தேசிய தலைமையகத்தில் பாஜக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். பாஜக வெற்றியை கொண்டாடுவதற்கு இன்று மாலையிலே பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இங்கே வரவேண்டும்.  இங்கு கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக மேளதாள  ஏற்பாடுகள்,  கட்அவுட்டுகள்  என்று பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பாஜக தலைவர்கள் எப்போது வருவார்கள் ?  என தொண்டர்கள் இங்கே ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆகவே இன்று மாலை இதற்கான நேரம் அறிவிக்கப்படலாம் எனவும்,  இன்று இரவிலே ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும்,  அந்த பொதுக்கூட்டத்துக்கு பிறகு முதல்வர் வேட்பாளர்கள் யார் ? அவர்களில் யாரை முதல்வராக தேர்ந்தெடுத்து  நியமிப்பது என்று பாஜக தலைமை முடிவு செய்யும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே பாஜக தலைவர்களுக்கு இன்று ஒரு நீண்ட நெடிய நாள் ஆலோசனை காத்திருக்கிறது.